தண்ணீரின் மேல் பரப்பில் நடிகர் கமல்ஹாசனின் உருவப்படம் வரைந்து சாதனை

திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்தவர் டவன்ஸி சுரேஷ். இவர் பல பிரபலமான நபர்களின் படங்களை அடிக்கடி வரைந்து சாதனை செய்வது வழக்கம். இதை ஒட்டி நடிகர் கமல்ஹாசனின் உருவப்படத்தை தண்ணீரின் மேல் வரைய வேண்டும் என ஆசைப்பட்டார்.

இதையொட்டி மூணாறில் உள்ள ஒரு ஹோட்டலில் மூன்றாவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தை தேர்வு செய்தார். தொடர்ந்து 2500 ஏ போர் பேப்பர் சீட் மற்றும் பள்ளிக்கூட சிறுவர்கள் படங்கள் வரைவதற்காக பயன்படுத்தும் படும் வர்ணங்களை பயன்படுத்தி அந்த நீச்சல் குளத்தில் மேற்பரப்பில் கமலஹாசன் படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படம் 50 அடி உயரமும் 30 அடி நீளமும் கொன்றதாகும். இந்த படத்தை உருவாக்குவதற்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டதாக சுரேஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here