தாயின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த சந்தேக நபர், சியாபு போதைப்பொருள் பாவித்திருப்பது உறுதி

மலாக்கா, ஜூலை 6 :

நேற்று கம்போங் பாயா லுபோவில் தாயின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர், சியாபு போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அது தொடர்பான சிறுநீர் பரிசோதனையின் முடிவுகள் இன்று அதிகாலை கிடைத்ததாக மலாக்கா மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ ஜைனோல் சாமா தெரிவித்தார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஸ்கிரீனிங் சோதனைக்கு பிறகு, 38 வயதான சந்தேக நபருக்கு ஆம்பெடமைன் இருப்பது கண்டறியப்பட்டது.

இருப்பினும் சம்பவம் நடந்த இடமான குடியிருப்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, ​​​​போதைப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மலாக்கா வைத்தியசாலையில் மனநல சிகிச்சை பிரிவில் பதிவு கொண்ட சந்தேகநபர் இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தனது தாயார் சிலைகளை வணங்கியதால், இங்குள்ள கம்போங் பாயா லுபோவில் உள்ள அவர்களது வீட்டில், தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடந்த சம்பவத்தில், 63 வயதான ரோஜிசா முகமட் டோம் என்பவர் சந்தேக நபரின் தங்கையால் அவரது மகள் படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் கிடக்க கண்டு பிடிக்கப்பட்டார்.

பிற்பகல் 3.05 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்ற போலீசார், பிரதேசவாசிகளின் உதவியுடன் சந்தேகநபரைக் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here