பாலிங் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 550 பேர் இன்னமும் வெள்ள நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

பாலிங், ஜூலை 11 :

கடந்த திங்கட்கிழமை பாலிங் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரண மையத்தில் தஞ்சமடைந்திருந்தனர், ஆனால் அப்பகுதியின் பல இடங்களில் வெல்ல நிலைமை சீரடைந்ததால், பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி, 131 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 550 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள மூன்று தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கியுள்ளனர்.
இது நேற்று ​​239 பேராக இருந்தது ஆனால் இன்று 311 பேராக அதிகரித்து மொத்தம் 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாலிங் மாவட்ட குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி, கேப்டன் (PA) ரசிடா ஹாசிம் தெரிவித்தார்.

“விடுமுறைக்கு சென்று உறவினர்கள் வீடுகளில் ஹரி ராயா ஹஜ்ஜுனை கொண்டாடியவர்கள் இன்று பிபிஎஸ்க்கு திரும்பியதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

ரசிதா தொடர்ந்து கூறுகையில், பல வீடுகள் முழுவதுமாக கழுவப்படவில்லை, மேலும் அங்கு குப்பைகள் நிரம்பியுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here