இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம்?

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தள்ளது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தனர். இதனால், பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார். கோத்தபய ராஜபக்சே கடற்படை முகாம் தளத்தில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அருகில் உள்ள ஒருநாட்டில் தங்கி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. புதன்கிழமை கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here