டொரொன்டோ:
கனடாவின் டொரொன்டோ நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
காலை 5:29 மணியளவில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
அதிர்ஷ்டவசமாக, இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று டொரொன்டோ காவல்துறை தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்தியவர் யார் என்பது குறித்த எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை, டொரொன்டோ அமெரிக்கத் துணைத் தூதரகமோ அல்லது அமெரிக்க வெளியுறவு அமைச்சகமோ இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.





















