இந்தோனேசியாவுடனான வெளிநாட்டு தொழிலாளர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு பிரதமர் வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஜூலை 15 :

இந்தோனேசியா மாற்றும் மலேசியாவுக்கு இடையே நிலவும் வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சனை மற்றும் சர்ச்சையைத் தவிர்த்து, அதனை மிக விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவுடனான இந்த முறுகல் நிலை மேலும் தீவிரமடைவதற்கு முன்னர் தீர்வு காணுமாறு மனிதவள அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மேலும் கூறினார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 15) இங்கு வீட்டு உரிமைத் திட்டம் (Hope) மற்றும் Karnival Jom Beli Rumah நிகழ்வைத் தொடங்கிய பின்னர் பிரதமர் இஸ்மாயில் சப்ரி நிருபர்களிடம் கூறுகையில், “இந்தோனேசியாவுடனான எங்கள் உறவை இந்த பிரச்சினை பாதிக்கலாம் என்று நான் கவலைப்படுவகிறேன், இந்த விவகாரம் நீடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

இந்த வார தொடக்கத்தில், இந்தோனேசியா-மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட தொழிலாளர் ஆட்சேர்ப்பு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட மீறலைக் காரணம் காட்டி, மலேசியாவில் பணிபுரிய தனது குடிமக்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியதாகக் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here