வீட்டின் களஞ்சிய அறையில் இரண்டு மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

கம்பார், ஜூலை 17 :

நேற்று இங்குள்ள மாலிம் நாவார், கம்போங் தெர்சுசான் முஹிப்பாவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் இருந்த களஞ்சிய அறையை ஒழுங்குபடுத்தும் போது, ​​ ஒருவர் வெடிகுண்டு வடிவில் இரண்டு பொருட்களைக் கண்டதாக கம்பார் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் நஸ்ரி தாவுத் தெரிவித்தார்.

59 வயதான அந்த நபர், தனது மைத்துனரின் வீட்டில் காலை 8.30 மணியளவில் இருந்தபோது அந்தப் பொருளைக் கண்டுபிடித்ததாகவும், அது வெடிகுண்டை ஒத்த நீள்வட்ட வடிவம் மற்றும் வெள்ளி நிறம் கொண்டதாகவும், அது களஞ்சியஅறையினுள் உள்ள ஒரு மர அலமாரியில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

உடனே அந்த நபர் போலீஸ் புகார் செய்தார், அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு (UPB), பேராக் கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகம் (IPK) ஆகியவற்றிற்கு தகவல் கொடுக்கப்பட்டதுடன் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கம்பார் போலீஸ் தலைமையகத்தின் (IPD) ஆயுதப் பிரிவு உட்பட உறுப்பினர்கள் குழு ஒன்று திரட்டப்பட்டது,” என்று அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், புகார்தாரர் இறந்த தனது மைத்துனருக்கு சொந்தமான வீட்டில் பழைய பொருட்களை பேக் செய்து கொண்டிருந்தபோது, வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

“புகார்தாரரின் கூற்றுப்படி, அந்த வீடு இராணுவ ஓய்வு பெற்ற அவரது மைத்துனர் விட்டுச் சென்ற வீடு மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு யாரும் வசிக்கவில்லை என்றார்.

UPB நடத்திய ஆய்வின் முடிவுகள், 20 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட 0.3 மீட்டர் நீளமுள்ள இரண்டு 60 மிமீ மோட்டார் குண்டுகள் என்றும் அவை 1972 இல் பயிற்சி நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டது.

மேலும் அக் குண்டு ஏவப்பட்டது, அதில் வெடிபொருட்கள் எதுவும் இல்லாததால் அவை பாதிப்பில்லாதது என கண்டறியப்பட்டது. பயிற்சி நோக்கங்களுக்காக வெடிகுண்டுகள் IPK பேராக்கிற்கு கொண்டு வரப்படும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here