கோத்தா திங்கி, ஜூலை 24 :
இங்குள்ள பண்டார் பெனாவாரில் உள்ள பண்டார் பெனாவார் அறிவியல் உயர்நிலைப் பள்ளியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் சிக்கிக் கொண்டார்.
ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நண்பகல் 2.35 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, நடவடிக்கை அதிகாரி மூத்த துணை தீயணைப்புத் தலைவர் மஸ்ரி இப்ராஹிம் தலைமையிலான ஏழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
செப்டிக் டேங்க் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டபோது, நிலச்சரிவில் அவர் சிக்கிக்கொண்டது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.