மலாக்காவில் பெரிக்காத்தான் – பாரிசான் கூட்டணி தொடரும் மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அன்வார் மூசா வேண்டுகோள் !

(ரெ.மாலினி)

மலாக்கா:

திர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் பாரிசான் நேஷனல் இடையிலான அரசியல் ஒத்துழைப்பு தொடர்ந்து கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பாஸ் செயற்குழு உறுப்பினரும், பெரிக்காத்தான் நேஷனல் தகவல் பிரிவு தலைவருமான டான் ஸ்ரீ டத்தோஸ்ரீ பங்லிமா ஹாஜி அன்வார் ஹாஜி மூசா, சமூக ஊடகப் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இன்ஷா அல்லாஹ், மலாக்காவில் பி.என் மற்றும் ,பாரிசானின் ஒற்றுமை தொடரும் பிரார்த்தனை செய்யுங்கள்,” என அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கருத்து, எதிர்வரும் தேர்தலைஎதிர்கொள்ளும் வகையில் மலாக்காவில் BN- PN இடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, வலுவான புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டால் மலாக்காவில் பாரிசான்- பெரிக்காத்தான் கூட்டணி பெரும் வெற்றியைப் பெறும் வாய்ப்பு இருப்பதாக அன்வார் மூசா தெரிவித்திருந்தார்.

மேலும், மலாக்காவின் அரசியல் மற்றும் மக்கள்தொகை நிலவரத்திற்கு ஏற்ப தொகுதி பங்கீட்டு முறையை வகுக்க வேண்டும் என்றும், 28 மாநிலத் தொகுதிகளில் 24 அல்லது 25 தொகுதிகள் வரை பாரிசான்- பின் கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் முன்னர் மதிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக பாஸ் அவசரப்படத் தேவையில்லை என்றும், இறுதி முடிவை கட்சியின் உயர்மட்டத் தலைமைத்துவத்திடம் விட்டுவிட வேண்டும் என்றும் அன்வார் முசா முன்பு கூறியிருந்தார்.

அவரது தற்போதைய கருத்து, தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் மலாக்காவில் பெரிக்காத்தான் – பாரிசான் பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நகர்வு குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here