பாசீர் கூடாங் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவிலைக் கட்டுவதற்கு 5 இலட்சம் ஒதுக்கீடு – ஜோகூர் மந்திரி பெசார்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 4 :

பாசீர் கூடாங்கில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவிலைக் கட்டுவதற்கு 500,000 வெள்ளி ஒதுக்கீடு செய்ய ஜோகூர் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி தெரிவித்துள்ளார்.

105 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் முதலில் பாசீர் கூடாங்கில் உள்ள புளூ ரிவர் எஸ்டேட்டில் அமைந்திருந்தது, ஆனால் அது தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்படுவதற்கு முன், பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர் தனது முகநூலில் நேற்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தஞ்சோங் லாங்சாட்டில் இந்திய சமூகத்தினருக்கு அடக்கம் செய்யும் இடத்திற்கான (இடுகாடு ) உள்ளூர் சமூகத்தின் விண்ணப்பத்திற்கும் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் இந்த விஷயத்தை அறிவிப்பதில் தான் மிகவும் சந்தோசமடைவதாகவும் அவர் கூறினார்.

“எனக்கு கோவிலுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது, மேலும் கோவிலின் இடமாற்றம் குறித்து குழுவால் விளக்கப்பட்டது. ஜோகூர் வாழ் மக்களுக்கு தொடர்ந்தும் நல்வாழ்வை வழங்குவதற்கு மாநில அரசு உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் இப்பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here