அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்பிக்க நான்காவது மாடியில் குதித்து ஆடவர் காயம்..!

காஜாங், ஆகஸ்ட் 9 :

நள்ளிரவு குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் காம்ப்ளெக்ஸ் ஹென்டியன் கஜாங்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, அக் கடைக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்த இந்தோனேசிய நபர் ஒருவர் காயம் அடைந்தார்.

நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய சோதனையானது, சட்ட விரோதமான வெளிநாட்டினர் (PATI) வசித்த பல வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

அங்கு நான்காவது மாடியில் உள்ள இந்தோனேசிய சட்டவிரோத குடியேற்றவாசிகள் வசிக்கும் ஒரு வீடு சோதனையிடப்பட்டது, குடியிருப்பாளர்களில் ஒருவர் குதித்து இரண்டாவது மாடியின் கூரையில் சிக்கிக்கொண்டார். பின்னர் அவர் குடிநுழைவுத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட பரிசோதனையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த 20 வயதுடைய அந்த நபருக்கு, வலது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

தமது உளவுத்துறையின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட Op Kutip நடவடிக்கையில் மொத்தம் ஆறு கட்டிடத் தொகுதிகளை உள்ளடக்கிய 134 வீடுகளில் 425 வெளிநாட்டினரை ஆய்வு செய்ததன் விளைவாக, கால் முறிந்த ஆடவர் உட்பட மொத்தம் 175 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்ய முடிந்தது என்று குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ஜெனரல், டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here