KTM ரயிலில் இனி இலவசமாக சைக்கிள்களை எடுத்துச் செல்லலாம்

சிரம்பான், ஆகஸ்ட் 13 :

ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் அனைத்து வகையான சைக்கிள்களையும் குறிப்பிட்ட நேரங்களில் KTM ரயில் சேவையில் இலவசமாக எடுத்துச் செல்ல KTMB நிறுவனம் அனுமதிக்கிறது.

KTMB இன் தலைமை இயக்க அதிகாரி, முஹமட் ஜெயின் மாட் தாகா கூறும்போது, ​​KTM ரயில் முன்பு சைக்கிள்களைக் கொண்டு வரும் பயனர்களிடம் RM2 வசூலித்தது.

“கடந்த ஏப்ரல் 18 முதல், KTM ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தது. இருப்பினும், முன்னர் மடிக்கும் வசதியுடைய சைக்கிள்கள் மட்டுமே ரயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

“இருப்பினும், ஆகஸ்ட் 6 முதல், KTM ரயிலில் அனைத்து வகையான சைக்கிள்களையும் பயணிகள் ரயில்களில் வார நாட்களில் பரபரப்பான நேரங்கள் தவிர்ந்த மற்றும் வார இறுதி நாட்களில் எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here