கோத்தா பெலுட் தீயின் போது 65 வயது மூதாட்டிக்கு காயம்

கோத்த கினாபாலு, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) காலை கோத்தா பெலுடில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 வயது மூதாட்டி ஒருவர் முதுகில் தீக்காயம் அடைந்தார்.

மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு டோலிம் பரண்டிஸுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காலை 10.14 மணியளவில் தீ பற்றிய ஒரு செய்தி வந்தது. இது Sekolah Kebangsaan Narinang அருகில் அமைந்துள்ள கம்பங் நரினாங்கில் ஒரு வீடு தீப்பிடித்ததாக விவரித்தது.

தீவிபத்தில் இரண்டு மாடி வீடு முற்றாக எரிந்து நாசமானது. மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மினி டிராக்டர் ஒன்றும் எரிந்து நாசமானது. காலை 11.33 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் நடவடிக்கை 11.55 மணியளவில் முடிவுக்கு வந்தது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here