2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் இடம்பிடித்தன கோலாலம்பூர், லங்காவி அனைத்துலக விமான நிலையங்கள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 :

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) மற்றும் லங்காவி அனைத்துலக விமான நிலையம் (LGK) ஆகியவை 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான, சமீபத்திய விமான நிலைய சேவை தர (ASQ) கணக்கெடுப்பில் உலகின் சிறந்த விமான நிலையங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ACI) நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பில் இரண்டு விமான நிலையங்களும் 5.00 மதிப்பெண்களை பெற்றுள்ளன

KLIA விமான நிலையத்திற்கு ஆண்டுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் வருகை என்ற பிரிவில் ஏழு மற்ற விமான நிலையங்களுடன் சாதனையைப் பகிர்ந்து கொண்டது அதேநேரம் LGK மட்டுமே 2.0 – 5.0 mppa பிரிவில் முழுப் புள்ளிகளைப் பெற்ற ஒரே விமான நிலையமாகும் என்பது பெருமைக்குரிய ஒரு விடயமாகும்.

“எங்கள் விமான நிலையங்களில் அதிகமான பயணிகளை நாங்கள் வரவேற்பதால், சிறந்த பயணிகள் அனுபவத்தை தொடர்ந்து பராமரிப்பது நிச்சயமாக மிகவும் சவாலானது.

“சமீபத்திய ASQ முடிவுகள் மலேசிய விமான நிலையங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த விமான நிலைய பயன்பாட்டு சமூகத்தினரிடமிருந்தும் கிடைத்த உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும்” என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர், டத்தோ இஸ்கந்தர் மிசல் மஹ்மூட் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here