குவா மூசாங் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மரத் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் ஒரு சிற்றுண்டி சாலை எரிந்து நாசமானது.
குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் ஶ்ரீபுதீன் அகிஃப் முகமட் நூர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து இரவு 11 மணியளவில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் 10 கிலோமீட்டர் தொலைவில் மூன்று எஞ்சின்களுடன் 13 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.
90 சதவீதம் அழிக்கப்பட்ட இரண்டு தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் சிற்றுண்டி சாலை தவிர, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீயில் அழிந்தன. இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை மற்றும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. நள்ளிரவு 1 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றார்.
இதற்கிடையில், சிற்றுண்டி சாலை நடத்துனர் ரோசுஹைசி ஜகாரியா 51, அவர் அரை தூக்கத்தில் இருந்தபோது நெருப்பு சத்தம் கேட்டதாகவும், தனது குடும்ப உறுப்பினர்களை விரைவாக எழுப்பியதாகவும் கூறினார். தொழிலாளர் குடியிருப்பில் இருந்து தொடங்கியதாக நம்பப்படும் தீ, மர கட்டமைப்புகள் காரணமாக வேகமாக பரவியது, என்றார்.









