மலாக்காவில் தொடர்மழை: நிவாரண முகாம்களில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் தஞ்சம்!

மலாக்கா:

மலாக்காவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8:00 மணி நிலவரப்படி 37 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேராக உயர்ந்துள்ளது.

மலாக்கா தெங்கா மற்றும் ஜாசின் ஆகிய மாவட்டங்களில் இதற்காக 3 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன எனச் சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் தளம் அறிவித்துள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 124 பேரில் 88 பெரியவர்கள், 34 குழந்தைகள் மற்றும் 2 கைக்குழந்தைகள் அடங்குவர்.

வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை பிற்பகல் வரை நீடித்த கனமழையால் பல இடங்கள் நீரில் மூழ்கின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here