கோலா பெர்லிஸ், ஆகஸ்ட் 23 :
15-ஆவது பொதுத் தேர்தலில் (GE15) கட்சிக்கு வெற்றியை உறுதி செய்வதற்காக அம்னோ தலைவர்கள் பேச்சை குறைத்துவிட்டு, அதிகமாக உழைக்க வேண்டும் என்று கேத்தரே சட்டமன்ற உறுப்பினரும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சருமான டான்ஸ்ரீ அன்னுார் மூசா அறிவுறுத்தினார்.
GE15 இன் சவால்களை எதிர்கொள்ள அம்னோ கட்சி திணறிக்கொண்டிருக்கும்போது, கட்சியில் முதலாம் அல்லது இரண்டாம் நிலை பதவிகளுக்காக சிலர் மும்முரமாக பரப்புரை செய்வதாக நூர் ஜஸ்லான் குற்றஞ்சாட்டியதாக பெர்னாமா முன்னதாக அறிவித்தது.
“என்னைப் பொறுத்தவரை, நாங்கள் (அம்னோ தலைவர்கள்) நெருக்கமாக பணியாற்றுவதில் கவனம் செலுத்துவது நல்லது, இதனால் கட்சிக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புக் இருக்கும்,” என்று அவர் கூறினார்.
அம்னோ தலைவர்கள் தங்களுக்குள் போட்டி போடுவதை விடுத்து, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உழைக்குமாறும் கட்சியின் வெற்றிக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அம்னோ தலைவர்களை வலியுறுத்தினார்.