இந்த வாரம் முழுவதும் பலத்த மழை, புயலுக்கு வாய்ப்பு – மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 :

இந்த வாரம் முழுவதும் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரையில் அடிக்கடி மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை முதல் இரவு வரை மேற்கு சபா மற்றும் சரவாக்கின் உள்பகுதிகளிலும் இதே வானிலை ஏற்படும் என மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா தெரிவித்தார்.

“தென்மேற்கு பருவமழை செப்டம்பர் தொடக்கம் வரை வலுவிழந்ததே இதற்குக் காரணம் என்றார்.

“மக்கள் சமீபத்திய வானிலை பற்றிய தகவலைப்பெற தமது அதிகாரப்பூர்வ இணையதளம், myCuaca மொபைல் பயன்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மற்றும் 1-300-22-1638 இல் MetMalaysia ஹாட்லைன் என்பவற்றை அணுகலாம்” என்றார்.

நேற்று பேராக், கிளாந்தான், பகாங், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் போன்ற பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

இதனால் செமினி மற்றும் காஜாங் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின மற்றும் தலைநகரில் கிட்டத்தட்ட 40 இடங்களில் மரங்கள் விழுந்த சம்பவங்களும் பதிவாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here