இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரி என்று என்னை அவதூறாக பேசிய ஜாகிர் நாயக் மீது என்ன நடவடிக்கை?

ஜார்ஜ் டவுன்,

சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக் தன்னை நைஜீரியாவில் சமீபத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில் தன்னை அவதூறாகப் பேசியதாக பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி குற்றம் சாட்டினார்.சொகோடோவில் ஒரு உரையாடலின் போது டாக்டர் ஜாகிர் என்னை ” இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரி” என்று கூறி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார் என்று ராமசாமி கூறினார்.

“Dr Zakir Naik Donates US$ 320,000 towards Palestine Cause” என்ற தலைப்புடன் அவரின் அந்த உரை பதிவு செய்யப்பட்டு நவம்பர் 4 அன்று பேஸ்புக்கில் பதிவேற்றப் பட்டது.

பேராசியருக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை, மேலும் ஜாகிரை கிரிமினல் அவதூறு, மல்டிமீடியா துஷ்பிரயோகம் மற்றும் பிற குற்றங் களுக்காக விசாரிக்க அதிகாரிகளை காவல்துறையின் அறிக்கை வலியுறுத்த வேண் டும் என்று ராமசாமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் திண்ட் இன்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

டாக்டர் ஜாகிருக்கு எதிராக காலை 11.31 மணிக்கு புக்கிட் மெர்தாஜாம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பேராசிரியர் பி.ராமசாமி வழக்கறிஞருடன் சென்றி ருந்தார்.அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வும் நீக்கவும் மற்றும் ராமசாமியின் கருத்துகளுக்கு நிபந்தனையற்ற எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்கவும் சட்டப்பூர்வ கோரிக்கை கடிதம் புத்ராஜெயாவில் உள்ள டாக்டர் ஜாகிரின் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ஷம்ஷர் கூறினார். மேலும் ஆறு மலேசிய செய்தித்தாள்களில் நான்கு மொழிகளில் வெளியிட வேண்டும் என்று ஷம்ஷர் கூறினார்.

மலாய் மொழியில் வெளியாகும் சினார் ஹரியான், பெரிடா ஹரியான், ஆங்கிலத்தில் தி ஸ்டார் அண்ட் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மாண்டரின் மொழியில் வரும் சின் செவ் டெய்லி, தமிழில் மக்கள் ஓசை எனப் பத்திரிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டார் அவர்.

டாக்டர் ஜாகிர், ராமசாமிக்கு எதிரான அதே அல்லது இதே போன்ற குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது என்று எழுத்துப்பூர்வ உறுதிமொழியை வழங்கு மாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

சட்டப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற 14 நாட்களுக்குள் எந்தவொரு கோரிக்கையையும் டாக்டர் ஜாகிர் நிறைவேற்றத் தவறினால், உடனடியாக அவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று ஷம்ஷர் கூறினார்.

உண்மையில், உங்கள் விரிவுரையில் எங்கள் வழக்குதாரரைப் பற்றி நீங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here