கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 :
SRC international வழக்கில், தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட குழு, முன்னாள் பிரதமர் நஜிப்பை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் RM210 மில்லியன் அபராதமும் விதித்தது.
இதன் மூலம் மலேசியாவில் முதன் முதல் சிறைக்கு சென்ற முன்னாள் பிரதமர் என்ற ரீதியில் டத்தோஶ்ரீ நஜிப் அப்துல் ரசாக் வரலாற்றில் பதிவானார்.
நஜிப் காஜாங் சிறைக்குச் சென்றபோதும், பேரரசரின் அரச மன்னிப்பின் மூலம் அவர் விடுதலையடைய வாய்ப்புண்டு என்று செய்திகள் பரவின.
இதற்கு பதிலளிக்கும் வகையில், தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான கூட்டணி (பெர்சே) ஒரு கோரிக்கையை முன்வைத்தது. அதாவது மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவிடம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெக்கான் சட்டமன்ற உறுப்பினரான நஜிப்பின் மன்னிப்புக் கோரிக்கையை நிராகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மக்கள் தொகைக்கும் பொருளாதாரத்திற்கும் உண்மையில் உதவுவதற்குப் பதிலாக மக்களின் பணத்தை தங்களை வளப்படுத்த பயன்படுத்தியதாக அவர்கள் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.