ஆகஸ்ட் 27 முதல் 30 வரை இடியுடன் கூடிய கன மழை பெய்யும்; மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 :

எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் 30 ஆம் தேதி வரை நாட்டில் குறைந்த விசைகொண்ட மற்றும் பல திசைக் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் இடியுடன் கூடிய மழை, குறிப்பாக பிற்பகல் முதல் இரவு வரை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் மேற்குக் கடற்கரை மற்றும் தீபகற்பத்தின் உள்பகுதி, சரவாக் (மத்திய மற்றும் வடக்கு), மேற்கு சபா மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அது அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், மெட்மலேசியா வானிலை ஆராய்ச்சி மற்றும் முன்கணிப்பு மாதிரி (MET-WRF), நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்புகளுக்கான ஐரோப்பிய மையம் (ECMRWF) மற்றும் உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பு (GFS) ஆகியவற்றின் பகுப்பாய்வு அடிப்படையில் இந்த நிகழ்வு கண்டறியப்பட்டது .

அதன்படி, பொதுமக்கள் எப்போதும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு www.met.gov.my என்ற இணையதளத்தையும், மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் அனைத்து சமூக ஊடகங்களையும் பார்க்கவும், சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca அப்ளிகேஷனைப் பதிவிறக்கவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here