கோலா கிராய் | மார்ச் 07, 2026:
கோலா கிராய், சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனை (HSIP) விடுதி அறையில் 29 வயது மதிக்கத்தக்க பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று காலை சுமார் 9:55 மணியளவில் மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது என்று, கோலா கிராய் மாவட்ட காவல்துறைத் தலைவர், சூப்பிரிண்டெண்டெண்ட் மஸ்லான் மாமட் தெரிவித்தார்.
தகவல் கிடைத்தவுடன் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர்.
அந்த விடுதி அறையில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், மரணத்தில் எவ்வித மர்மமோ அல்லது குற்றச் செயல்களுக்கான அறிகுறிகளோ கண்டறியப்படவில்லை.
உயிரிழந்த மருத்துவாரின் உடல், மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய HSIP தடயவியல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு இச்சம்பவம் திடீர் மரணம் (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 09-9666222 என்ற எண்ணில் கோலா கிராய் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



















