Savingbywaniey வழி மோசடியில் ஈடுப்ட்ட பெண்ணை தேடும் போலீசார்

‘Savingbywaniey’ எனப்படும் பண முதலீட்டு மோசடியை நடத்துவதாக நம்பப்படும் 23 வயது பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சந்தேக நபர் Kampung Landak Hilir,, குபாங்கைச் சேர்ந்தவர் என்றும், கடந்த இரண்டு மாதங்களாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுவதாகவும் பாலிங் மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் ஷம்சுதின் மாமத் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் 30 வயதான பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றிய பின்னர் சந்தேக நபர் போலீசாரால் தேடப்பட்டு வருவதாக அவர் கூறினார். கடந்த ஜூன் மாதம் சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் ‘Eypolwaniey’ என்ற பெயரில் ‘Savingbywaniey’ என்ற முதலீட்டை விளம்பரப்படுத்திய விளம்பரம் மூலம் மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட, ஒரு கடை உதவியாளர், RM12,000 முதலீடு செய்தார், மேலும் நல்ல வருமானம் கிடைக்கும் என்று உறுதியளித்தார். ஆனால் மூலதனப் பணம் மற்றும் லாபம் மீட்கப்படவில்லை என்பதோடு  சந்தேக நபர் காணாமல் போனார்.

பாதிக்கப்பட்டவர் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு புகாரினை அளித்தார். மேலும் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின்படி போலீசார் விசாரணையைத் தொடங்கினர் என்று அவர் இன்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில், விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று மாலை 5.30 மணியளவில் 30 வயதுடைய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்ததாக ஷம்சுதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here