நார்வே நாட்டு மன்னர் ஹரால்டு மலேசிய மருத்துவமனையில் அனுமதி

நார்வேயின் மன்னர் ஹரால்டு  தொற்றுநோய் காரணமாக மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நார்வே அரச குடும்பம் செவ்வாய்க்கிழமை (பிப் 27) தெரிவித்துள்ளது. 87 வயதான மன்னர் தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கான தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் மலேசியாவில்  விடுமுறையில் தங்கியிருந்த போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அங்கு நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னர் மலேசிய மற்றும் நார்வே மருத்துவ பணியாளர்களிடமிருந்து நல்ல கவனிப்பைப் பெறுகிறார் என்று அரச குடும்பம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மன்னர் ஹரால்ட் 1991 ஆம் ஆண்டு முதல் நோர்வேயின் சம்பிரதாய ரீதியிலான அரச தலைவராக இருந்து வருகிறார் மற்றும் ஐரோப்பாவின் மிகப் பழமையான மன்னர் ஆவார். சமீப வருடங்களில் அவர் பலமுறை தொற்றுநோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதய அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். பட்டத்து இளவரசர் ஹாகோன் அவரது தந்தைக்கு நாட்டை வழி நடத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here