நஜிப் வழக்கின்போது நீதிமன்ற வளாகத்தில் சத்தம் போட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர்

நீதிமன்றத்தில் சத்தம் போட்ட அடையாளம் தெரியாத ஆடவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1எம்டிபி) நிதி மோசடி வழக்கு ரிங்கிட் 2.28 பில்லியன் வழக்கு விசாரணையில் கலந்து கொள்ள சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்று செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் பெஹ் எங் லாய் தெரிவித்தார்.

இருப்பினும், அந்த நபருக்கு இந்த வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், அந்த நபரை நீதிமன்ற அறைக்குள் நுழைய அனுமதிக்காத அதிகாரி, அவரை  வெளியேறும்படி உத்தரவிட்டார்.

நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது, ​​டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் 1எம்டிபி வழக்கு விசாரணையை செய்தியாக்கிக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி அந்த நபர் உரத்த குரலில் பேசினார் என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவர் கூறியபடி, சந்தேக நபர் பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினரால் உத்தரவிடப்பட்டது. சந்தேக நபர் ஒரு ஆசிரியர் என்றும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொது மக்களுக்குத் தீங்கு விளைவித்ததற்காக தண்டனைச் சட்டத்தின் 290ஆவது பிரிவின்படியும், அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடன் பேச்சு கொடுத்ததற்காக சிறு குற்றச் சட்டம் பிரிவு 14ன் படியும் விசாரணைக்கு உதவ சம்பந்தப்பட்ட நபர் சாட்சியமளிக்க அழைத்துச் செல்லப்படுவார் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here