கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 :
கடந்த ஆண்டு அலுவலக உபகரண விநியோகிஸ்தர் ஒருவரிடமிருந்து லஞ்சம் வாங்கியதற்காக, குடிமைத் தற்காப்புப் படை (APM) பணியாளர் ஒருவருக்கு RM28,000 அபராதம் அல்லது ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட முகமட் நஸ்ரின் முகமட் நசீர் (38) என்பவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுசானா ஹுசின் இந்த தண்டனை வழங்கினார்.
குடிமைத் தற்காப்புப் படையின் உதவியாளரான முகமட் நஸ்ரின், Syarikat Pendang Jaya Sdn Bhd இன் உரிமையாளரிடம் இருந்து RM20,500 பெற்றுக் கொண்டதாகவும் மற்றும் RM18,000 பெற முயன்றதற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் 11 ஆம் தேதி வரை புத்ராஜெயா மற்றும் பகாங்கில் உள்ள மூன்று வெவ்வேறு உணவகங்களில் இக் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் தண்டனைச் சட்டம் பிரிவு 165ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.









