30 வயதில் இளம் பிரதமரா? தவறில்லை என்கிறார் முஹிடின்

செர்டாங்: இளைஞரை பிரதமராக தேர்ந்தெடுப்பதில் தவறில்லை என டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) பெரிகாத்தான் தேசிய மாநாட்டில் நடந்த விவாதப் பேச்சுகளுக்குப் பதிலளித்த முஹிடின், மலேசியா 30 வயதுக்குட்பட்ட ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுக்க விரும்பினால் தனக்கு எந்தக் கவலையும் இருக்காது என்றார்.

என்னைப் பொறுத்தவரை இளைஞர் ஒருவர் பிரதமரானாலும் பரவாயில்லை. நாட்டின் எதிர்காலத்திற்காக என்றால், ஏன் இல்லை? எல்லா நேரத்திலும் முஹிடினின் முகத்தை மட்டும் வைத்திருக்க முடியாது. சில நாடுகளில் 30 வயதுக்குட்பட்ட பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மலேசியாவில் இது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் நிராகரிக்க முடியாது என்று மாநாட்டிற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் முகைதின் கூறினார்.

எவ்வாறாயினும், அந்த இளம் நபர் சில நற்சான்றிதழ்களைக் காட்டிய திறமையுள்ள ஒருவராக இருக்க வேண்டும் என்று முஹிடின் மேலும் கூறினார். முன்னதாக, மாநாட்டில் பேச்சாளர்கள் பலர் முஹிடின் அவர்களின் பிரதமர் வேட்பாளராக நம்பிக்கை வாக்களித்தனர்.

கெராக்கான், சபா ஸ்டார் மற்றும் சபா முற்போக்குக் கட்சி (எஸ்ஏபிபி) ஆகியவற்றின் தலைவர்கள் ஒருமனதாக முஹிடினுக்கு மீண்டும் நாட்டை வழிநடத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறினர். முஹிடின் மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை பிரதமராக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here