பள்ளி வேனைப் பயன்படுத்தி டீசல் கடத்த முயன்ற ஆடவர் கைது

மிரி, ஆகஸ்ட் 28 :

பள்ளி வேனைப் பயன்படுத்தி டீசல் கடத்த முயன்ற ஆடவர் ஒருவர், இங்குள்ள ஜாலான் காட்லியா 3ல் உள்ள கடல் காவல்துறை (PPM) மண்டலம் 5ன் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மிரி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அலெக்சன் நாகா சாபு கூறுகையில், 33 வயதுடைய சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்டதை அடுத்து, நேற்று காலை 9.30 மணியளவில் கடத்தல் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டார்.

“வாகனத்தை ஆய்வு செய்ததில், கூடுதல் இரும்புத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் வேனின் பின்புறத்தில் மொத்தம் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று ஜெர்ரி கேன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“சந்தேக நபர் மொத்தம் 250 லிட்டர் டீசலை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார் மற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை சேமிக்கும் அல்லது வைத்திருக்கும் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் எந்த அங்கீகார ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார்” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

RM16,000 க்கும் அதிகமான மதிப்புள்ள வேன் மற்றும் அனைத்து டீசல்களும் கைப்பற்றப்பட்டு, வழங்கல் கட்டுப்பாடு சட்டம் 1961 இன் படி மேலதிக நடவடிக்கைக்காக KPDNHEP யிடம் ஒப்படைக்கப்பட்டதாக அலெக்ஸன் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here