இளைய சகோதரனை துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் உள்ளூர் கவுன்சிலர் ஒருவர் போலீசாரால் கைது

ஜெம்போல், ஆகஸ்ட் 30:

அவரது 39 வயது இளைய சகோதரரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் விசாரணையில் உதவ, சந்தேகத்திற்குரிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளூர் கவுன்சிலராக உள்ள சந்தேக நபர், ஆகஸ்ட் 27 அன்று இங்கு அருகிலுள்ள பாகாவ்வில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

போலீஸ் குழுவொன்று நேற்று முன்தினம் அதிகாலை சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்று பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்ததாகவும், பின்னர் அவர் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறியதாகவும் தெரியவருகிறது.

அவரது வயிறு மற்றும் முதுகில் தீக்காயங்கள் மற்றும் ஒரு பொருளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தழும்புகளையும் என்பவற்றையும் போலீசார் கண்டறிந்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் தனது காயங்களுக்கு சந்தேக நபரே காரணம் என்று கூறினார்.

ஆயுதத்தால் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 324-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெம்போல் மாவட்ட காவல்துறை தலைவர், ஹூ சாங் ஹூக்கை தொடர்பு கொண்டபோது, இந்த வழக்கு தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார்.

எனினும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், அவர் மேலதிக தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here