வரி விதிக்கப்படாத மற்றும் போலி மதுபான விற்பனையில் ஈடுபட்ட வியாபாரி கைது

ஜோகூர் பாரு, செப்டம்பர் 4 :

போலி மற்றும் பல்வேறு பிராண்டுகளின் வரி விதிக்கப்படாத மதுபானங்களை விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்த வியாபாரி, கடந்த வியாழன் அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இங்குள்ள ஜாலான் ரியாங் உத்தாமா, தாமான் கெம்பீராவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் இரவு 7 மணியளவில் போலீசார் நடத்திய சோதனையில், மொத்தம் 6,168 கேன்கள் மற்றும் 951 மதுபாட்டில்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன. பரிமுதல்களின் மொத்த மதிப்பு RM305,252.

மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக கடையின் உரிமையாளரான 53 வயதான கடைக்காரர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் கடந்த 3 மாதங்களாக போலி மற்றும் வரி செலுத்தாத மதுபானங்களை விற்பனை செய்து லாபம் சம்பாதித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“பாட்டிலில் உள்ள போலி மதுபானம், பதப்படுத்தப்பட்டு, பிற இடங்களில் இருந்து பெறப்பட்டு, சந்தை விலையில் RM150 முதல் RM170 வரை விற்கப்படுவதாக நம்பப்படுகிறது.

மதுபானம் நுகர்வோரை ஏமாற்ற போலியான சுங்கத் துறை QR குறியீட்டைப் பயன்படுத்தியதாகவும் சுங்க வரி அமைப்பு பயன்பாட்டைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியாது என்பது கூடுதல் ஆய்வில் கண்டறியப்பட்டது, ”என்றும் அவர் இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் (IPK) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“சந்தேக நபர் சட்டவிரோதமதுபான விநியோகத்தை எங்கிருந்து பெற்றார் மற்றும் இந்தக் கும்பலின் உறுப்பினர்கள் தொடர்பிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 11 வரை 10 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார், ”என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here