சுங்கைப்பட்டாணியில் உள்ள கம்போங் புக்கிட் துகாங் ஜூசோ என்ற இடத்தில், கணவரின் கார் எதிர்பாராத விதமாக மோதியதில் மனைவி கொல்லப்பட்டதாக என்எஸ்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 69 வயதுடைய பெண் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
76 வயதான (கணவர்) கார் கியரில் இருப்பதை அறியாமல் கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்தார், இதனால் வாகனம் முன்னோக்கிச் சென்று மனைவி மீது மோதியது என்று கோலா முடா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜைதி சே ஹாசன் கூறினார்.
தம்பதியினர் முன்னதாக கிராமத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பவிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக அவர் மேலும் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.








