100 ஆண்டுகளுக்கும் மேலான 5 கடைவீடுகள் தீயில் எரிந்து நாசம்

கோலா சிலாங்கூர், செப்டம்பர் 5 :

இங்குள்ள ஜாலான் சுல்தான் இப்ராஹிம், பண்டார் மெலாவதியில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலான ஐந்து இரண்டு மாடி கடைவீடுகள் இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமானது.

அதிகாலை 5.15 மணியளவில் நடந்த சம்பவம் இரண்டு காலி வளாகங்கள், ஒரு துணிக்கடை, ஒரு தனியார் கோவில் மற்றும் ஒரு வீடு என்பன எரிந்து நாசமாயின.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர், நோராஸாம் காமிஸ் கூறுகையில், அதிகாலை 5.20 மணியளவில் தீ விபத்து குறித்து தமது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

கோலா சிலாங்கூர், தஞ்சோங் காராங், பெஸ்தாரி ஜெயா, செகிஞ்சான் மற்றும் சுங்கை பெசார் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து உறுப்பினர்கள் மற்றும் இயந்திரங்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“தீ விபத்து ஏற்பட்ட போது அனைத்து கடை உரிமையாளர்களும் சம்பவ இடத்தில் இல்லை, அணைக்கும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. மேலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

“ஐந்து கடைவீடுகளின் அழிவின் மதிப்பிடப்பட்ட அளவு 80 சதவீதம்” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here