சீனாவில் பயங்கர நிலநடுக்கம்; 46 பேர் பலி

பிஜீங், செப்டம்பர் 6:

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று நண்பகல் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் 29 பேர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஹன்சி தீபெதின் நகரில் அமைந்துள்ள லுடிங்கை சேர்ந்தவர்கள் என்றும் 17 பேர் யாயன் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் மேலும் சிலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here