கம்போடியாவில் வேலை மோசடியால் பாதிக்கப்பட்ட 24 மலேசியர்கள் இன்று நாடு திரும்பினர்

செப்பாங், செப்டம்பர் 9 :

கம்போடியாவில் சட்டவிரோத வேலைவாய்ப்பு மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து மீட்கப்பட்ட மொத்தம் 24 பேரை மலேசிய அரசாங்கம் இன்று நாட்டிற்கு அழைத்து வந்தது.

அக்குழுவின் வருகையுடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா மற்றும் அந்நாட்டுக்கான மலேசிய தூதர் டத்தோ எல்டீன் ஹுசைனி முகமட் ஹாஷிம் ஆகியோரும் கூட இருந்தனர்.

அவர்கள் புனோம் பென்னில் இருந்து ஏர் ஏசியா விமானம் AK539 இல் ஏறி, இன்று பிற்பகல் 4.37 மணிக்கு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

“எனினும், இரண்டு கம்போடிய குடிவரவு டிப்போக்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 29 மலேசியர்கள் அங்குள்ள நடைமுறைகளுக்கு உட்பட்டு கட்டம் கட்டமாக நாடு திரும்புவார்கள்” என்று அவர் இங்கு நடந்த ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here