கிழக்கு கடற்கரை விரைவுச் சாலையில் மரம் விழுந்ததில் 21 வயது இளைஞர் உயிரிழந்தார்

குவாந்தான்: கிழக்கு கடற்கரை விரைவுச் சாலையின் KM67.4 இல் விழுந்த மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்  உயிரிழந்தார்.

பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கானி கூறுகையில், வெள்ளிக்கிழமை (செப். 9) இரவு 7.17 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், பெந்தோங் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

குழு வந்தவுடன், மரக்கிளைகளின் குவியலுக்கு அடியில் பாதிக்கப்பட்ட முஹம்மது முஸ்தகிம் நூர் அசார் 21, என்பவரைக் கண்டுபிடித்தனர். பின்னர் சம்பவ இடத்திலேயே முஹம்மது முஸ்தகிம் இறந்துவிட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

தாமான் ஹிஜாவ், காராக் பகுதியைச் சேர்ந்த பலியானவரின் உடல், மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here