கடத்தல் சம்பவம் குறித்த வைரல் செய்தி போலி செய்தி என்கின்றனர் ஜோகூர் போலீசார்

ஜோகூர் பாருவில் பிரத்யேக வகுப்பு (டியூஷன் சென்டரில்) சிறுவன் கடத்தல் சம்பவம் நடந்ததாக வாட்ஸ்அப் செயலியில் வெளியான வைரலான செய்தியை போலி செய்தி என போலீசார் நிராகரித்துள்ளனர்.

ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமட், சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை என்று கூறினார். மேலதிக விசாரணையில் ஒன்பது வயது சிறுவன் தனது தந்தையுடன் வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுபோன்ற செய்தியை பரப்புவது பொதுமக்களிடையே அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

தவறான ஊகங்களைப் பரப்புவதும் செய்வதும் சட்டவிரோதமானது, மேலும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம். இது RM50,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

சரிபார்க்கப்படாத ஆதாரங்களில் இருந்து பெறப்படும் இதுபோன்ற கூற்றுகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும் கமருல் ஜமான் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here