மஸ்கட் விமான நிலையத்தில் இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் காயம்

ஓமன், செப்டம்பர் 14:

ஓமன் -மஸ்கட் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து புகை வெளியேறியது. இதில் விமானத்தில் இருந்த 14 பயணிகள் காயமடைந்தனர்.

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியதையடுத்து, விமானத்தில் இருந்து பயணிகள் உடனடியாக அவசர கால வெளியேறும் வழியாக வெளியேற்றப்பட்டனர். அவசரகால சூழ்நிலையைத் தொடர்ந்து மஸ்கட் விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஆலோனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “மஸ்கட் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்த ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின் 2-ல் புகை வெளியேறுவதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here