மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இரண்டு பதின்ம வயது வாலிபர்கள் பலி..!

மிரி, செப்டம்பர் 15 :

நேற்று, இங்குள்ள ஜாலான் கோலா பாராம் பைபாஸ் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில், இரு பதின்ம வயது வாலிபர்கள் உயிரிழந்தனர்.

மிரி மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அலெக்சன் நாகா சாபு கூறுகையில், மாலை 6.10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், 16 மற்றும் 17 வயதுடைய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

SYM போனஸ் வகை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 16 வயது இளைஞன் கோலா பாராம் பைபாஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, மற்றையவரான 17 வயது இளைஞன் யமஹா Y15ZR வகை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“சம்பவ இடத்தில் நடந்த விசாரணையில், SYM போனஸ் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்தத் தவறி, Y15ZR மோட்டார் சைக்கிளளை ஓட்டி வந்தவர் மீது மோதியது கண்டறியப்பட்டது.

“இரவு 7.10 மணியளவில் பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக, மிரி மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இவ்வழக்கு , பிரிவு 41(1) மற்றும் பிரிவு 42(1), சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் படி விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது என்று அலெக்சன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here