GE14 இல் மஇகா போட்டியிட்ட இடங்களில் GE15யிலும் போட்டியிடும்

கோலாலம்பூர்: கடந்த தேர்தலில் மஇகா போட்டியிட்ட அனைத்து இடங்களும் 15ஆவது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று தேசிய முன்னணி (BN) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

அம்னோ தலைவரான அஹ்மட் ஜாஹிட், மஇகா மற்ற இடங்களிலும் போட்டியிடலாம். ஆனால் இது BN துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசனுடன் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது என்றார்.

டான் ஸ்ரீ விக்கி (MIC தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன்), நான் உறுதியளிக்கிறேன், GE14 மற்றும் கடந்த தேர்தல்களில் MIC போட்டியிட்ட எந்த இடங்களும் MIC க்குத்தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டான் ஶ்ரீ விக்கி, நீங்கள் இன்னும் விரும்பினால், தோக் மாட் (முகமட்) உடன் சரிபார்க்கலாம்.

ஆனால், BN கூறு கட்சிகளின் ஒற்றுமை பலனளித்துவிட்டதாக நாங்கள் கருதுவதால், டோக் மாட், நான் மற்றும் பிரதமர் (டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்) மஇகாவின் ஆதரவை சிறந்த முறையில் பரிசீலிப்போம் என்று நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய மஇகா படையணி மற்றும் குற்றத்தடுப்பு கண்காட்சியை இன்று இங்கு ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, MIC GE15 இல் 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது மற்றும் இந்த விஷயத்தை BN உயர்மட்டத் தலைமைக்கு பரிசீலனைக்கு அனுப்பியது.

GE14 இல், MIC ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது அதாவது பேராக்கில் சுங்கை சிப்புட் மற்றும் தாப்பா; சுங்கை பூலோ, உலு சிலாங்கூர், காப்பார் மற்றும் கோத்த ராஜா (சிலாங்கூர்); போர்ட்டிக்சன் (நெகிரி செம்பிலான்); செகாமட் (ஜோகூர்) மற்றும் கேமரன் ஹைலேண்ட்ஸ் (பகாங்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here