கடிதம் எழுதி வைத்து காணாமல் போன 27 வயது இளைஞர்

கோத்த கினபாலுவில் செவ்வாய்கிழமை (செப்டம்பர் 20) தனது அறை தோழருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதைத் தொடர்ந்து 27 வயது இளைஞன் காணாமல் போனார். சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் மிஸ்ரான் பிசாரா கூறுகையில், காலை 8.43 மணிக்கு அடுக்குமாடியில் இருந்து  இந்த விஷயம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது.

எங்கள் பணியாளர்கள் வந்தபோது, அந்த நபர் அருகில் இல்லை என்று பார்த்தோம். அவர் எழுதி வைத்த கடிதம் மட்டுமே மிச்சம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த நபர் அங்கு இல்லாததைக் கண்டு, வழக்கு மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோத்த கினாபாலு OCPD உதவி ஆணையர் ஜைதி அப்துல்லா அவர்கள் இந்த வழக்கை சரிபார்த்து வருவதாக கூறினார்.

பேசுவதற்கு யாராவது தேவைப்படுபவர்கள் Befrienders KLஐ 03-7956 8145 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது பினாங்கில் 04-281 5161/1108, ஈப்போவில் 05-547 7933/7955, 08- 825 5788, 016-45 இல்  அல்லது கோத்த கினபாலு மின்னஞ்சல் sam@befrienders.org.my வழி தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here