பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 24 :
இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 24) செமினியில் உள்ள ஜாலான் சுங்கை ஜெய், கம்போங் சுங்கை ஜெய் என்ற இடத்தில், அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, 1.5 மீ ஆழமுள்ள வாய்க்கால் மீது மோதியதில் வயதான தம்பதியர் கவலைக்கிடமான தருணத்தை அனுபவித்தனர்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், இன்று காலை 9.27 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததையடுத்து, செமினி தீயணைப்பு நிலையத்தின் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“வயதான தம்பதிகளை ஏற்றிச் சென்ற கார் பெரனாங்கில் இருந்து சுங்கை ஜெய் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் மோதி விபத்துக்குள்ளானது.
“பாதிக்கப்பட்ட இருவரும் வாகனத்தில் சிக்கிக்கொண்டனர் என்றும் காலை 9.53 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்களால் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்” என்றும் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 72 மற்றும் 70 வயதுடைய முதியவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவரும் காஜாங் மருத்துவமனைக்கு பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்,” என்றும் அவர் கூறினார்.