அரசியல் நிதி மசோதா நவம்பரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 24 :

அரசியல் நன்கொடை/ நிதியளிப்பு மசோதா நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, முதல் மற்றும் இரண்டாம் வாசிப்புகளுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபர் தெரிவித்தார்.

தேசிய ஆளுமை, நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு மையம் என்பன மசோதாவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நோக்கம் மற்றும் கொள்கை என்பவற்றுக்கான அளவுருக்களை தயாரித்து, அவை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆய்வுக்கு சமர்ப்பித்துள்ளது என்றார்.

எனவே எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அரசு மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுடனும் இது தொடர்பான ஒரு அமர்வை நடத்தி, வரைவு மசோதா குறித்து கருத்துக்களைப் பெறுவேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here