ஜாஹிட் கூறிவது போல் இஸ்மாயில் நடந்து கொள்ளவில்லையென்றால் அவர் அம்னோவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்படலாம்

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விரைவில் நாடாளுமன்றத்தை கலைக்க அழைப்பு விடுக்காவிட்டால் அம்னோவால் வெளியேற்றப்படலாம் என்று பெஜுவாங் தலைவர் டத்தோஸ்ரீ முகிரிஸ் மகாதீர் கூறியுள்ளார்.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அவர்களின் விருப்பம் நிறைவேறாதபோது முந்தைய கட்சித் தலைவர்கள் செய்ததைப் போலவே செயல்பட முடியும் என்று முக்ரிஸ் வாதிட்டதாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கட்சியின் விருப்பத்திற்கு இஸ்மாயில் இணங்கவில்லை என்றால், ஜாஹிட் இஸ்மாயிலை பதவி நீக்கம் செய்யலாம்.

டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக் ஒருமுறை டான்ஸ்ரீ முஹிடின் யாசினை முக்கிய விஷயத்தை ஆலோசிக்க சிறப்பு அம்னோ பொதுச் சபைக் கூட்டத்திற்குச் செல்லவில்லை என்பதற்காக பதவி நீக்கம் செய்தார்.

நிச்சயமாக ஜாஹிட் ஒரு துணை தலைவரை அவர் பிரதமராக இருந்தாலும் நீக்க முடியும் என்று அவர் மேற்கோள் காட்டினார்.

ஜாஹிட் விமர்சகரான ஜஹாரின் யாசினை வெளியேற்றவும், இரண்டு கூட்டரசு தலைவர்களின் உறுப்பினர் பதவியை இடைநிறுத்தவும் நேற்றிரவு கட்சி எடுத்த முடிவில் இஸ்மாயிலுக்கு சாத்தியமான “எச்சரிக்கை” இருந்ததாக முக்ரிஸ் கூறினார்.

பாசீர் சலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் அலோர் செத்தார் அம்னோ பிரிவின் தலைவர் யூசோப் இஸ்மாயில் ஆகியோர் ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here