விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதாக ஐதீகம். இதனால் தான் விமக்கேற்றி வழிபாடு செய்தால் முப்பெரும் தேவியரின் அருளையும் பெற முடியும் என சொல்லப்படுகிறது. அதோடு இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால் வாழ்வில் தெய்வீக தன்மையும், தூய்மையும் பெருவதாக நம்பிக்கை. வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ பலம் பெருகும். தீயசக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் ஆகியவை வீட்டை நெருங்காது.
வீட்டில் ஏற்றப்படும் தீபம் என்பது தெய்வீக சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனால் விளக்கை அணைக்கும் முறையிலும் சில ஆன்மீக நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். விளக்கு ஏற்றுப் போது எப்படி சில விதிமுறைகளை நாம் கடைபிடிக்கிறோமோ, அதே போல் விளக்கை மலையேற்றும் போதும் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது சில தவறுகளை கண்டிப்பாக செய்து விடக் கூடாது. அவை அமங்கலமான செயல்களாக கருதப்படுகின்றன. இதனால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
. விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது.
- கையால் வீசி அணைக்கக் கூடாது. விளக்கில் ஏற்றப்படும் தீ, காற்று இரண்டுமே பஞ்சபூதங்களில் ஒன்றாகும். இதனால் ஒரு ஆற்றலை கொண்டு மற்றொன்றை அணைக்கக் கூடாது என சொல்லப்படுகிறது.
- விளக்கில் உள்ள எண்ணெய் முற்றிலும் தீர்ந்து, திரியே கருகி தானாக அணையும் வரை விடக் கூடாது. இது வீட்டில் கெடுதலை ஏற்படுத்தும். விளக்கை ஏற்றியதிலிருந்து குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
- சில நேரங்களில் பூக்களைக் கொண்டு தீபத்தை நேரடியாக அமுக்கி அணைப்பார்கள். ஆனால் அப்படி செய்யக் கூடாது. பூவும் மங்கள பொருள் என்பதால் அதை விளக்கின் தீயில் கருக செய்வது அமங்கலமான செயலாகும்.
- விளக்கில் உள்ள சுடர் மட்டுமல்ல, வெப்பமும் தானாக தணியும் வரை விளக்கை அந்த இடத்தில் இருந்து நகர்த்தவோ அல்லது சுத்தம் செய்யவோ கூடாது.
- நாள் முழுவதும் விளக்கை தொடர்ந்து எரிய விடுவது கூடாது.
விளக்கை குளிர்விக்கும் சரியான முறை :
.வெள்ளி குச்சி அல்லது புனித குச்சிகளை பயன்படுத்தி குளிர்விக்கலாம்.
- திரியை உள்பக்கம் இழுத்து விளக்கை குளிர்விப்பது சிறந்தது.
- மாதுளை, நெல்லிக்காய், மருதாணி போன்ற குச்சிகளை பயன்படுத்தலாம்.
- வாழைத்தண்டின் சிறு துண்டினைக் கொண்டு திரியின் நுனியை லேசாகத் தொட்டு அணைக்கலாம்.























