இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிகேஆர் உறுப்பினர் விரைவில் மாநில இணைப்புக் குழு துணைத் தலைவராக நியமிக்கப்படுவார் – டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன்

சிரம்பான், அக்டோபர் 5 :

நெகிரி செம்பிலான் மாநில இணைப்புக் குழுவில் உள்ள மூன்று துணைத் தலைவர்களில் ஒருவராக இந்திய சமூகத்தைச் சேர்ந்த பிகேஆர் உறுப்பினர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், மந்திரி பெசாருமாகிய அவர் கூறுகையில், அந்த காலியிடத்தை நிரப்ப பொருத்தமான வேட்பாளரை கட்சி இன்னும் தேடி வருவதாகக் கூறினார்.

மாநிலக் குழுவில் உள்ள மூத்த பதவிகளுக்கு இந்திய சமூகத்தைச் சேர்ந்த யாரையும் நியமிக்காது இருக்கும் முடிவு வரும் 15-வது பொதுத் தேர்தலில் கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று சில பிகேஆர் உறுப்பினர்கள் கூறியதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“எங்களிடம் இன்னும் ஒரு துணைத் தலைவர் பதவி காலியாக உள்ளது. விரைவில் அந்த பதவிக்கு இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிப்போம் என்றும் “இந்திய சமூகத்தையோ அல்லது வேறு சமூகத்தையோ நாம் ஓரங்கட்டுகிறோம் என்று கூறுவது தவறானது,” என்று இன்று மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here