“மாவார் கும்பல்” முறியடிக்கப்பட்டது; பதின்ம வயதினர் உட்பட நால்வர் கைது

கப்பாலா பத்தாஸ், அக்டோபர் 5 :

கடந்த செப்டம்பர் 28 அன்று, பெர்தாம் பெர்டானாவில் பினாங்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் , குறைந்தது 16 வீடு உடைப்பு வழக்குகளில் தொடர்புடைய ‘மாவார் கும்பலை’ சேர்ந்தவர்கள் என நம்பப்படும் படிவம் நான்கு மாணவர் உட்பட நான்கு நபர்களை கைது செய்தனர்.

அதிகாலை 3.40 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று சந்தேக நபர்கள் பிடிபட்டதாக செபெராங் பிறை உத்தாரா (SPU) மாவட்ட காவல்துறை தலைவர்,துணை ஆணையர் முகமட் ரட்ஸி அஹ்மட் தெரிவித்தார்.

“சந்தேக நபர்கள் ​​மூவர் ந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டினை உடைத்து உள்ளே நுழைந்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 30 அன்று, கும்பலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபர்களில் ஒருவரின் காதலியை கெடாவின் பீடோங்கில் போலீசார் கைது செய்தனர், ”என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், 16 முதல் 37 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் SPU மற்றும் சுங்கை பட்டாணி, கெடாவைச் சுற்றியுள்ள பிசகுதிகளில் வீடு உடைப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

கும்பல் சுங்கை பெட்டானியில் வசித்ததாகவும், குற்றத்தைச் செய்ய SPU க்கு செல்லும் என்றும் முகமட்

அவர்களிடமிருந்து பல்வேறு பிராண்டட் பைகள், தொலைக்காட்சிகள், காலணிகள்,கைத்தொலைபேசிகள் , மடிக்கணினிகள், நகைகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள பணம் மற்றும் குற்றத்தை செயல்படுத்துவதற்கான கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குற்றவியல் சட்டத்தின் 457-வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக, முந்தைய போதைப்பொருள் மற்றும் குற்றப் பதிவுகள் கொண்ட அனைத்து சந்தேக நபர்களும் அக்டோபர் 11 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக முகமட் ராட்ஸி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here