வரும் வாரத்தில் கடல் அலை எழுச்சிக்கு வாய்ப்பு; கடற்கரையோரவாசிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

அலோர் ஸ்டார், அக்டோபர் 5 :

எதிர்வரும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஏற்படக்கூடிய உயர் அலை நிகழ்வின் போது, கடல் மட்டம் மூன்று மீட்டர் உயரத்தை எட்டினால், இங்குள்ள கோலக் கெடா மற்றும் கோத்தா கோல மூடா, சுங்கை பட்டாணி ஆகிய கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற நினைவூட்டப்படுகிறார்கள்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கெடா மாநில இயக்குனர் சயானி சைடன் கூறுகையில், கண்காணிப்புக்கள் மற்றும் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், உயர் அலை நிகழ்வின் போது இரு பகுதிகளிலும் கடல் மட்டம் உயரும்.

“கோலக் கெடாவில் அடிக்கடி அதிக உயர் அலைகள் ஏற்படுகின்றன, ஆனால் உயர் அலைகள் அதிகரித்தால் உடனடியாக அவ்விடத்தைவிட்டு நகருமாறும் உடனுக்குடன் அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெற குடியிருப்பாளர்களுக்கு, குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

“பெரும்பாலும் நீர் மட்டம் மூன்று மீட்டர் வரை உயரலாம், ஆனால் உள்பகுதியில் நீர்மட்டம் கணுக்கால் அளவு இருந்தால், உயர் அலை மட்டம் மூன்று மீட்டரை எட்டாது,” என்று அவர் கூறினார்.

மேலும் கெடாதீயணைப்புப் படை, வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் எந்த வெள்ள பேரிடரையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் சயானி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here