அமைச்சரவை விவாதங்களை வெளியிட முடியாது: மாமன்னர் முன்னிலையில் சத்தியம் செய்திருக்கிறேன்

அமைச்சரவை விவாதங்கள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் பைசல் அசுமு (பிக்ஸ்) மறுத்துவிட்டார்.

இந்த விஷயத்தில் மாமன்னர்  அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன் சத்தியம் செய்ததாக அவர் கூறினார். நான் அதை வெளிப்படுத்தினால், நான் நரகத்திற்குச் செல்வேன். நான் நரகத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றார் பைசல்.

இன்று புத்ராஜெயாவில் 2022 தேசிய விளையாட்டு தினத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெர்சத்து துணைத் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here