கோத்தா கினாபாலு:
சபாவின் கிழக்கு கடற்கரை மாவட்டமான தவாவ் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில், 2 கிலோவுக்கு மேல் சியாபு போதைப்பொருள் வைத்திருந்தாக நம்பப்படும் அறுவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த புதன்கிழமை (மே 1) நள்ளிரவு 1.30 மணியளவில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், கம்போங் இந்தரசாபாவில் உள்ள ஒரு வீட்டைச் சோதனை செய்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் குறித்த ஆறு பேரையும் கைது செய்தனர்.
இருப்பினும் சந்தேக நபர்கள் தப்பி ஓட முயன்றனர் என்றும், ஆனால் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்தனர் என்று, தாவாவ் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறினார்.
சந்தேகநபர்கள் 20 முதல் 40 வயதுடையவர்கள் என்றும், ஒரு உள்ளூர்காரர் மற்றும் ஐந்து இந்தோனேசியர்களை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் எடை 2 கிலோவிற்கும் அதிகமாக இருந்தது என்றும் அதன் மதிப்பு RM120,000க்கும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
போதைப்பொருள் விற்பனையாளர்கள் என நம்பப்படும் சந்தேக நபர்கள் அனைவரும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்காக மே 9 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏசிபி ஜாஸ்மின் தெரிவித்தார்.





















