மலாய் கட்சிகளின் ஒற்றுமையை பாஸ் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 9 :

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (GE15) நாடு அரசியல் ஸ்திரத்தன்மையை அடைய வேண்டுமானால், அம்னோவும், பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியாவும் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

GE15க்கான தேர்தல் இடங்கள் பற்றிய விவாதத்தில் இரு கட்சிகளும் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்றார்.

15வது பொதுத் தேர்தலுக்குக்கு முன்னதாக மூன்று மலாய்காரர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை நிலவுவதற்கு, பாஸ் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என்றும், அம்னோவால் முன்வைக்கப்படும் ஒரு விரைவான தேர்தலின் விளிம்பில் இருந்தாலும் மூன்று மலாய் கட்சிக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த தன்னாலான நடவடிக்கையை செய்யும் என்றும் அவர் கூறினார்.

“அம்னோவிற்கும் பெர்சாத்துவிற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று பாஸ் கருதுகிறது, அத்தோடு அதில் முன்வைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் இட ஒதுக்கீட்டிற்கான விவாதம் ஆகியவை அடங்கும்” என்று, அவர் நேற்று கோலாலம்பூரில் நடந்த பாஸ் கட்சியில் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

அனினும் ‘அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தேர்தலை நடத்துவதற்கு பாஸ் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்கள் தங்கள் மாநில சட்டசபைகளை கலைக்காது’ என்று அப்துல் ஹாடி மேலும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here